History Of Sri Periyanayaki Amman
periyanayaki amman shadow
ஸ்ரீ பெரியநாயகி அம்மனை வணங்குவோம்
ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோவில், தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் ( தற்போது கோவில் அமைந்துள்ள ) குளக்கரையில் வாழ்ந்த மக்களை, நாக தேவதை துணை நின்று ஒரு தாய் காத்துவந்தாள்.
அங்கு வாழ்ந்த மக்கள் அந்த தாயை தங்களின் குலத் தெய்வமாக பாவித்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் நாகத்தை குடையாக தன் தலையில் அரவணைத்துக் கொண்ட அந்த தாய், அம்மனாக உருவெடுத்து எங்கள் பகுதி மக்களை காத்துவந்தாள். அணைவரும் அம்மனுக்கு பூஜை செய்தது வழிபட்டு வந்தார்கள்
எங்களை காத்துவந்த நாயகி சூரப்பள்ளதில் வாழும் அணைத்து மக்களையும் காபாற்றும் பெரியநாயகியாக உருவெடுத்தாள். பிறகு மக்கள் ஸ்ரீ பெரியநாயகி என்று அழைத்து வழி பட ஆரம்பித்தனர்.
முழுமனதுடன் பக்தியோடு வந்து வேண்டுபவர்களுக்கு கேட்கும் வரத்தை கொடுகின்றாள் எங்கள் தாய் பெரியநாயகி. தொன்று தொட்டு வந்த மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.
இன்று வரை எங்கள் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றார்கள். ஆடி மாத விழாதான் எங்கள் ஊரின் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழாவின் போது நாங்கள் முதல்நாள் இரவு கோவிலில் தங்கி இருந்து அதிகாலையில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்போம். மேலும் எங்கள் பகுதில் ஸ்ரீ பெரியநாயகிக்கு துணையாக காடேரி அம்மன், மூனிஸ்வரர், முன்னோடியான், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களும் உள்ளன.

Latest News

Latest News Display here

For Website

Website designing, Portals and Web Development, Billing Software
Karuna : +91 9095250480
Dulasi : +91 9095455317